செய்திகள்

இலங்கை அணி பந்துவீச்சை பலப்படுத்தவேண்டும்: முத்தையா முரளீதரன்

இலங்கை அணியின் இங்கிலாந்திற்கு எதிரான வெற்றிக்கு பின்னர் ஓரு விடயம் தெளிவா புலனாகியுள்ளது. அடுத்த போட்டிகளில் விளையாடும் இலங்கை அணியில் சில மாற்றங்கள் அவசியம் என்பதே அந்த விடயம்.  அணியின் துடுப்பாட்டம் மிகச்சிறப்பாக காணப்படும் அதேவேளை பந்து வீச்சு பாரிய பலவீனமாக காணப்படுகின்றது.குறிப்பாக இறுதி 10 ஓவர்கள அணிதலைவருக்கு பெருந்தலைவலியாக மாறியுள்ளது.

Cricket World Cup

ஆறு சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் போதும் இலங்கை அணிக்கு . இலங்கையின் முதல் 5 துடுப்பாட்ட வீரர்களும் சிறப்பாக விளையாடும் அதேவேளை ஓவ்வொரு போட்டியிலும் அவர்களை 300 ஓட்டங்களை பெறுமாறு கேட்கமுடியாது. அடுத்து வரும் போட்டிகளில் கடினமான எதிரணிகளை எதிர்கொள்ளும்போது இது அவர்களுக்கு கடினமான விடயமாக மாறலாம். திரிமன்ன, சங்கா, டில்சான், மகேல போன்றவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ள அதேவேளை இனிவரும் நாட்கள் பந்துவீச்சாளர்களுக்கானவை.  களத்தடுப்பு வீரர்களுக்கானவை,இவர்கள் எதிரணியை 250 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த முயலவேண்டும். இலங்கை அணி களத்தடுப்பின் போது தனக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.  இது தவிர தற்போதுஅணியில் உள்ள ஏழுதுடுப்பாட்ட வீரர்களில் ஓருவரை நீக்கிவிட்டு பந்துவீச்சை பலப்படுத்தவேண்டும்.  இது திமுத் அல்லது சந்திமலுக்கு பாதிப்பை எற்படுத்தலாம். எனினும் அணியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் விளையாடும் விதத்தையும்,பந்துவீச்சாளர்கள் திணறுவதையும் கருத்தில்கொள்ளும்போது ஏழாவது துடுப்பாட்ட வீரர் ஓருவர் அவசியமில்லை என்றே தோன்றுகிறது.ஆறு சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் போதும்.

ஏழாவது வீரராக நான் நுவான் குலசேகரவை சேர்த்துக்கொளவேன். பந்து வீச்சில் அணிக்கு இவர் வலுசேர்ப்பார்.  குறிப்பாக இறுதி ஓவர்களின் போது. இவரால் துடுப்பெடுத்தாடவும் முடியும்.சம்பியன்ஸ் கிண்ணபோட்டியில் 38 பந்துகளில் இவர் பெற்ற 58 ஓட்டங்களை மறக்க முடியாது. ரங்கன ஹேரத்திற்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில் மேலதிக பந்துவீச்சாளர் அணிக்கு அவசியம்.இந்த போட்டித் தொடர் முழுவதும் இலங்கை அணியின் சிறந்த பந்துவீச்சாளர் ஹேரத்தே.

CRICKET-NZL-SRI
அவர் விளையாடாவிட்டால் சச்சித்திரவுடன் இன்னொரு பந்து வீச்சாளர் அணிக்கு அவசியம்.  பழைய மலிங்கவை அவ்வப்போது நாங்கள் பார்த்தாலும் அவர் இன்னமும் முழுமையதன நிலைக்கு திரும்பவில்லை. லக்மல் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியை மறக்க நினைப்பார்.  அவுஸ்திரேலியாவுடனான அடுத்த போட்டி யார் இந்த பிரிவில் மூன்றாவது நான்காவது இடத்தை பெறுவது என்பதை தீர்மானிக்கும். பிரிவில் மேலே இருப்பவர்கள் எதிர்ப்பிரிவில் பலவீனமான அணியை சந்திப்பார்கள்.