செய்திகள்

இலங்கை அரசாங்கத்தின் முடிவிற்கு சீனா வரவேற்பு

கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் முடிவை சீனா வரவேற்றுள்ளது.
சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹொங் லெய் இதனை தெரிவித்துள்ளதுடன் தென்னாசியாவில் சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை முக்கிய சகாவாக விளங்குகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை சீனாவுடனான அதன் சினேகப+ர்வமான உறவுகளின் ஒட்டுமொத்த முக்கியத்தை கருத்தில் கொள்ளும்,இலங்கையில் ஏற்படும் அரசியல் மாற்றங்களால் இரு நாடுகளுக்கும் இடையிலாக பாரிய ஓத்துழைப்பு திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாததை உறுதிசெய்யும் என சீனா எதிர்பார்ப்பதாக இலங்கை;கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனாவின் பிரதிவெளிவிவகார அமைச்சர் லியுசியான்சோ இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்ததாகவும் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.