செய்திகள்

இலங்கை அரசாங்கம் நடத்தவிருக்கும் “புலம்பெயர் இலங்கையர் விழா “

புலம்பெயர் மக்களுடன் இணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள இலங்கை வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர, இதன் பொருட்டு “புலம்பெயர் இலங்கையர் விழா ” ஒன்றை நடத்தவிருப்பதாகவும் தெரிவித்துளார்.

21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை ஜேர்மன் நாட்டுக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்ட அவர் அந்த நட்டு வெளிநாட்டமைச்சர் ஸ்டீன்மியரை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.

வர்த்தகம், கலை, கலாசாரம், கல்வி, விளையாட்டு என்று சகல துறைகளையும் சார்ந்த எல்லா இலங்கையர்களும் இந்த விழாவில் பங்கெடுத்து அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் உட்பட எல்லா வழிகளிலும் எவ்வாறு இலங்கையுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று அறிந்துகொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

வெளிநாட்டு வர்த்தகம், முதலீடு, உல்லாசம் ஆகியவற்றின் மூலம் இலங்கையின் பயன்படுத்தப்படாத வளங்களை பயன்படுத்தி இலங்கையின் பொருளாதாரத்தை நிலையான வளர்ச்சிக்கு இட்டுச் செல்வதே தமது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

Mangala in Berlin (3) Mangala in Berlin (4) Mangala in Berlin (5) Mangala in Berlin (6)