செய்திகள்

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 86 படகுகளை மீட்க இந்திய மீனவர்கள் குழு நாளை இலங்கை பயணம்

இலங்கை அரசின் நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்கபட்ட இந்திய படகுகளை மிட்க மீட்புக்குழு இன்று இலங்கை செல்ல  உள்ளனர்.
கடந்த  2014 ஜீன் 1 ந் தேதி முதல் டிசம்பர் 9 ந் தேதி வரையிலான காலங்களில் இலங்கை கடல்பகுதியில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 45 விசைபடகுகளும்,புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 29 படகுகளும், நாகை மாவட்டத்தை சேர்ந்த 8 படகுகளும், பும்புகார் மாவட்டத்தை சேர்ந்த 1 படகும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 4 படகுகளும் உள்பட 87 படகுளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து  அரசுடைமையாக்கியிருந்தது.இதனையடுத்து இந்திய மீனவர்கள் வேலை நிறுத்தம் ஆர்பாட்டம் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில்  இங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந் நிலையில் கடந்த பிப்ரவரி 15 ந் தேதி இலங்கை அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்ததையடுத்துநல்லிணக்க அடிப்படையில் 87 படகுளையும் விடுவிக்க உத்தரவு இட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 12 ந் தேதி இலங்கை நீதிமன்றங்களால் 87 படகுகளின் ஆவணங்களை ஒப்படைத்தவிட்டு மீட்டுச்செல்லம்படி நிபந்தனையுடன் விடுதலை செய்ய உத்தரவு இட்டது இதனையடுத்து ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குநர் கோபிநாத் மீன்துறை ஆய்வாளர் கௌதம் ஆகியோர் கடந்த மாதம் படகுகளின் ஆவணங்களை இலங்கை சென்று ஒப்படைத்தனர்.

இந்நிலையில்ராமநாதபுரம்,புதுக்கோட்டை,நாகை ,பூம்புகார்,காரைக்கால்  பகுதிகளைச்சேர்நத 25 படகுகளுடன் படகு உரிமையாளர்கள், மீனவசங்கதலைவர்கள், மீன்பிடி தொழிலாள்கள் , மெக்கானிக்,மற்றும் மீன்துறை அதிகாரிகள்  உள்பட 150 பேர் கொன்ட மீட்புக்குழு இன்று கோட்டைபட்டிணம் ,நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலிருந்து புறப்பட்டு கோடியாக்கரை சென்றடைவார்கள். இவர்களை இந்திய கடலோகாவல் படை அதிகாரிகள் அழைத்துச் சென்று சர்வதேசகடல் எல்லையில் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்க உள்ளனர். வரும் 17ம் தேதி மீட்புக்குழு காங்கேசன் துறைமுகம் சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.
படகுளை மீட்கவும் அதற்குன்டான நிதிஉதவிகளை செய்து நடவடிக்கை எடுத்துவரும் மத்திய மாநில அரசுகளுக்கு மீட்புக்குழுவினர் நன்றி தெரிவித்துக் கொன்டனர்.