செய்திகள்

இலங்கை அரசு ஜனநாயக நிறுவனங்களை ஊழலிலிருந்து மீட்க போராடுவதை மக்கள் பாராட்டுகின்றனர்: அமெரிக்கா தெரிவிப்பு

ஜெனீவா 29 வது கூட்டத் தொடரின் ஐ.நா. மனித உரிமைகள் சபை கூட்டத்தில் இலங்கையின்  பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்து அதன் பாதையில் தொடர்ந்து செல்ல இலங்கை அரசாங்கத்தை அமெரிக்க பிரதிநிதிகள் குழு  வலியுறுத்தியுள்ளது.

இங்கு பேசிய அமெரிக்க பிரதிநிதி ஒருவர் இலங்கை அரசு ஜனநாயக நிறுவனங்களை  ஊழலிலிருந்து மீட்க போராடுவதை மக்கள் பாராட்டுகின்றனர் இது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளனர்.

மேலும் இலங்கை தொடர்பான அறிக்கையொன்றை ஏற்கனவே அமெரிக்க பிரதிநிதிகள் குழு ஆகஸ்ட் மாதம் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் (OHCHR) அலுவலகத்துக்கு வழங்கியுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம் இலங்கையின் அண்ணமைக்கால நடவடிக்கை அறிக்கையை  செப்டம்பர் அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்க வேண்டும்  என மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.