செய்திகள்

இலங்கை ,இந்திய மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணலாம் : ஜனாதிபதி

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகைதந்துள்ள தமிழக மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சிலரை  நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதிஊடக  பிரிவு தெரிவித்துள்ளதாவது:
இந்த சந்திப்பின்போது இரு நாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்போது இரண்டு நாடுகளுக்கும் அநீதி ஏற்படாத வகையில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, இரு நாட்டு அதிகாரிகளுக்குமிடையே முன்னெடுக்கப்படுகின்ற பேச்சுவார்த்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட  வேண்டுமெனவும் இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைவதற்கு தமிழக மீனவர் சங்கங்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 37 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதற்கும் இதன்போது ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.