செய்திகள்

இலங்கை இன்று “பொலிஸ் நாடாகி” விட்டது: கோதபாய ராஜபக்ஸ

கடந்த 9 வருட காலத்தில் ஒரு சதத்தையேனும் சட்டத்துக்கு முரணாக பெற்றுக்கொள்ளவில்லை என்றும் ஆனால் இன்று அரசியல் பழிவாங்கலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாலர் கோதபாய ராஜபக்ஸ இலங்கை இன்று போலிஸ் நாடாக மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகத்துக்கு இன்று கலை வந்தபோது செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோதே இவ்வாறு தெரிவித்த அவர், முன்னைய ஆட்சியில் அமைச்சின் செயலாளர்களாக பதவி வகித்த அனைவர் மீதும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதகவும் அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது வங்கிக் கணக்குக்கு வெறுமனே தனது மாதாந்த கொடுப்பனவும் இராணுவ ஓய்வூதிய கொடுப்பனவுமே வைப்பிலிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.