செய்திகள்

இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வடக்கிற்கு விஜயம்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இராணுவத்தினரின் பணிகளைப் பாராட்டும் வகையில் இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா வடக்கிற்கு விஜயம் ஒன்றனை மேற்கொண்டிருந்தார்.கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தில் படை வீரர்களுடன் சந்திப்பில் ஈடுபட்ட அவர் புத்தாண்டு விடுமுறை மற்றும் கொரோனா தொற்று காரணமாக படையினர் நீண்ட காலமாக வீடுகளுக்கு விடுமுறையில் செல்லாது அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றமையைப் அவர் பாராட்டினார்.

இதன் போது கிளிநொச்சி படை முகாம்களின் கட்டளைத் தளபதியின் ஆளுகைக்குள் இருக்கும் மாங்குளம் படைமுகாமுக்கும் கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அமைந்திருக்கும் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்துக்கும் சென்று கொரோனா வைரஸ் தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

வருகின்ற தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் இராணுவ அதிகாரிகள் இராணுவ படைவீரர்கள் ஆகியவர்களுடன் சுமுகமான முறையில் கலந்துரையாடல் மற்றும் கொரோனா வைரசுடன் போராடிக்கொண்டிருக்கும் இராணுவ அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இராணுவத்தினரின் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் இன்று வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் பலவற்றுக்கும் அவர் சென்றுள்ளதுடன் கிளிநொச்சி விஜயத்தை அடுத்து யாழ்ப்பாணம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)Army-Commander-Shavendra-Silva-Kilinochchi-Visit Army-Commander-Shavendra-Silva-Kilinochchi-Visit-2