செய்திகள்

இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு; 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது பற்றியே கூட்டமைப்புடன் பேசிவருகிறோம்: என். டி.டி.வி க்கு பிரதமர் அளித்த பேட்டியின் முழு விபரம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரு தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் என்.டி.டி.வி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இனப்பிரச்சினைக்கான அதிகாரபரவலாக்கம், ஐ. நா. விசாரணை உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பிலான புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் மற்றும் அணுகுமுறைகள் பற்றி தனது கருத்துக்களை பகிர்ந்திருந்தார். அவரது இந்த கருத்துக்கள் செய்திகளாக வெளிவந்திருந்தபோதிலும் பல்வேறு மட்டங்களில் பல்வேறுவிதமாக அர்த்தம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், அவர் கூறிய கருத்துக்களை தெளிவாக புரிந்துகொள்ளும் வகையில் அந்த நேர்கானலை தமிழாக்கம் செய்து இங்கு முழுமையாக பிரசுரிக்கிறோம்.

கேள்வி: நீங்கள் இல்லாமல் சிறிசேன வெற்றி பெற்றிருக்கமுடியாது என்று கூறுவது சரிதானா? இந்த தேர்தலில் முக்கியாமனவர் நீங்கள் தானே?

பதில்: மாற்றத்தை விரும்பிய மக்களே இந்த தேர்தலின் முக்கியமானவர்கள். அவர்களுக்கு ஒரு மன்னர் தேவைப்படவில்லை. ஒரு ஜனாதிபதியும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதுமே அவர்கள் வேண்டியது.அதனால் நாம் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தினோம். எதிர்க்கட்சிகளில் ஐக்கிய தேசிய கட்சியே மிகவும் பெரிய கட்சி. அத்துடன் வடக்கு தவிர ஏனைய இடங்களில் நாம் கட்சிகளை வழிநடத்தினோம்.

கேள்வி: முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸ ஒரு சதித்திட்டம் தீட்டினார் என்ற செய்திகளைவிட ஆட்சி மாற்றம் அமைதியாக நடந்தது என்று பலர் நம்புவதை நீங்கள் அறிவீர்கள். தேர்தல் நடந்த மறுநாள் காலை நீங்கள் சென்று ராஜபக்ஸவை சந்தித்தீர்கள். உடனடியாக அவர் இணங்கினாரா அல்லது ஏதாவது சதித்திட்டம் இருந்ததா ?

பதில்: தான் தேர்தலில் தோற்று விட்டதாக கூறி தொலைபேசி எடுக்குமாறு கேட்டு ஜனாதிபதி ராஜபக்ஸ எனக்கு ஒரு செய்தி அனுப்பினார். ஆட்சி மாறுவது குறித்து தொலைபேசியில் கதைப்பதைவிட நேரில் கதைப்பது நல்லது என்று நான் பதில் அனுப்பினேன். நான் அங்கு சென்றபோது தனது தோல்வியை ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டார். அங்கு நாம் ஆட்சி மாற்றம் பற்றி கதைத்தோம்.

கேள்வி: அங்கு எந்த குழப்பத்தையோ வேறு எதனையுமோ அவர் செய்யவில்லையா ?

பதில்: இல்லை. நான் அவரை சந்தித்தபோது அப்படி எதுவும் நடக்கவில்லை.

கேள்வி: இந்த ஆட்சியில் நீங்கள் தான் உண்மையில் சக்தி மிக்கவர் என்றும் இது சிறிசேனவின் ஆட்சி அல்ல ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி என்றும் பலர் நம்புகிறார்கள். இது உண்மையா?

பதில் : நாங்கள் எல்லோரும் சேர்ந்து மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆக்கியிருக்கிறோம். கட்சிகள் பல அரசாங்கத்தை அமைத்திருக்கின்றன . நாம் கூட்டாக அதனை நிர்வகிப்போம். இந்த மாதம், நிறைவேற்று அதிகார ஜனாதிமுறையை இல்லாமல் செய்வதற்காக திருத்தம் கொண்டுவர இருக்கிறோம். பின்னர், அனேகமாக ஜூன் அல்லது மே யில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவோம். இதன்போது யார் பிரதமராக இருக்கவேண்டும் என்றும் யார் அரசாங்கத்ததை வழிநடத்தவேண்டும் என்பதையும் மக்கள் தீர்மானிப்பார்கள்.

கேள்வி: சரி. நீங்கள் சொல்கிறீர்கள் இது ஒரு இடைக்கால அரசாங்கம் என்று. ஆனால் , இது ரணிலின் அரசாங்கம் என்றே பலர் கூறுகிறார்கள். ஏனென்றால், அமைச்சரவை அமைச்சர்களில் எல்லோருமே உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

பதில்: நான் கூறியது போல பிரதான கட்சி ஐக்கிய தேசிய கட்சி. அதனால் கூடிய அமைச்சர்கள் ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்தவர்கள்.

கேள்வி: இந்தியா அக்கறை கொண்டுள்ள மூன்று முக்கிய விடயங்கள் பற்றி பார்ப்போம். நீங்கள் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்குவீர்களா இல்லை அது வெறுமனே வெற்று காகிதத்தில் மட்டும் தான் இருக்குமா?

Indo Sri Lankaபதில்: இணக்கப்பாடு என்னவென்றால் 13 ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான். தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாம் மேற்கொள்ளும் கலந்துரையாடலும் அதுவேதான். 13 ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்று கொள்கையளவில் நாம் இணங்கிருக்கிறோம்.

கேள்வி: இதனுடன் உங்களுக்கு உடன்பாடா?

பதில்: நாம் 13 ஆவது திருத்தச் சட்டத்துடன் தான். பொலிஸ் அதிகாரம் பற்றியும் அது எவ்வாறு இயங்கவேண்டும் என்பது பற்றியும் நாம் இப்போது பேசிவருகிறோம்.

கேள்வி: ஆனால் அதுதானே முக்கிய விடயம்?

பதில்: பொலிஸ் அதிகாரம் என்பது ஒரு மாகான மட்ட விடயம். ஆனால், நாம் சுயாதீன ஆணைக்குழுவை கொண்டுவரும்போது இதனை எவ்வாறு செய்யப்போகிறோம் என்பது தொடர்பில் சில விவகாரங்கள் இருக்கின்றன. வடக்கில் மட்டுமல்ல ஏனைய 9 மாகாண முதலமைச்சர்களும் பொலிஸ்படையை தமது சொந்த தனிப்பட்ட இராணுவமாக பயன்படுத்துவர் என்ற பெரும் அச்சம் நாட்டில் இருக்கின்றது. இதுபற்றி நாம் எல்லோரும் கவலை கொண்டுள்ளோம். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இது தெரியும். இதற்கெதிரான ஒரு பாதுகாப்பை நாம் மேற்கொள்ளவேண்டும்.

கேள்வி: ஆனால் , கொள்ளை அளவில் நீங்கள் அதிராக இல்லை. அதேவேளை முழுமையான சுயாட்சியை வழங்குவதற்கு நீங்கள் கொள்கையளவில் உடன்படவில்லை.

பதில்: 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும். அதேவேளை , சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு மட்டுமன்றி பொது சேவைகள் அணைக்குழு பற்றியும் கேள்விகள் இருக்கின்றன. இவை எவ்வாறு மாகாணங்களுக்கு பொருத்தமாக அமைகின்றன என்பது பற்றி விவாதிக்கப்படவேண்டும்.

கேள்வி: இரண்டாவது விடயம் என்னவென்றால், முன்னைய அரசில் ஏற்படுத்தப்பட்ட மிகையான சீன சார்புத் தன்மை. இதனை நீங்கள் சரி செய்வீர்களா ? இது இந்தியாவுக்கு பெரிதும் கவலையளிக்கும் விடயம்.

பதில்: எம்மைப் பொறுத்தவரையில் எமது பாரம்பரிய கொள்கை என்னவென்றால் இந்தியாவுடன் நட்பை பேணும் அதேவளை சீனா , ஜப்பான் மற்றும் ஏனைய நாடுகளுடனும் நட்புறவை பேணுவது தான்.

கேள்வி: ஆனால் இது ராஜபக்ஸ காலத்தில் சற்று அதிகமாக சென்று விட்டது என்று ஒத்துக்கொள்கிறீர்களா ? ஏராலமான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

பதில்: மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவை சீனாவுக்கு எதிராகவும் சீனாவை இந்தியாவுக்கு எதிராகவும் பயன்படுத்தினார் என்று நான் எப்பொழுதுமே கூறி வந்திருக்கிறேன். ஆனால் இது வெற்றி அளிக்கவில்லை.

கேள்வி: ஆனால் ஒப்பந்தகள் பற்றி என்ன கூறுகிறீர்கள்? ஜனாதிபதி சீனாவினால் நிதியளிக்கப்படார். இதுபற்றி விசாரணைகளுக்கு நீங்கள் உத்தரவிட்டுள்ளீர்கள்.

பதில்: சகல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஒப்பந்தங்களையும் நாம் ஆராய்ந்து வருகிறோம். எதிலாவது ஊழல் இருந்தால் சீனாவாக இருந்தாலென்ன எந்த நாடாக இருந்தாலென்ன நடவடிக்கை எடுப்போம். துறைமுக செயற்த்திட்டத்தையும் நாம் பரிசீலித்துக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி: நீங்கள் ஊழல் இடம்பெற்றதாக கருதுகிறீர்களா?

பதில்: இரு அறிக்கைகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவற்றின் அடிப்படையில் ஊழல் நடந்ததா இல்லையா என்பது தெரியவரும்.

கேள்வி: யுத்த குற்றங்களை விசாரணை செய்வது பற்றிய கேள்வி என்ன?

பதில் : எதனைச் செய்தாலும் எமது சட்ட ஆட்சிக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதே எப்பொழுதும் எமது நிலைப்பாடாகும்.

கேள்வி: ஆகவே , சர்வதேச விசாரணை அனுமதிக்கப்படாது என்கிறீர்கள்.

பதில்: இல்லை. நாம் சொல்வது என்னவென்றால், குற்றம் இழைத்த ஒருவரை விசாரிக்கும் சட்ட அதிகாரம் இலங்கைக்கே உண்டு என்பதாகும்.

கேள்வி: ஆகவே , பழைய அரசின் நிலைப்பாட்டை தான் நீங்களும் கொண்டிருக்கிறீர்கள். அதாவது, ஐ.நா விசாரணை வரவேற்கப்படாது. நீங்கள் உங்களது சொந்த விசாரணையை உள்நாட்டில் செய்வீர்கள்.

HUMAN RIGHT COUNCIL MYANMAR UNபதில்: இல்லை. ஐ.நா தனது விசாரணையை செய்யலாம். இந்த விடயங்களில் நாம் ஐ.நா வுடன் இணைந்து செயற்படுவோம். அதுதான் வேறுபாடு. மனித உரிமைகள் சபையுடன் செயற்படுவோம். ஆனால், நாம் சொல்வது என்னவென்றால், எந்த சட்ட அதிகாரமும் இலங்கைக்குள் இருக்க வேண்டும் என்பதாகும். இந்தியா அமெரிக்கா போன்று இந்த விடயங்களை இலங்கை நீதிமன்றங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும். மற்றவர்களைவிட நாம் வேறுபட்டவர்கள் அல்ல. ஆனால் நாம் நீதித் துறையின் சுதந்திரத்தை அனுமதிப்போம்.

கேள்வி: அப்படியானால் நீங்கள் போர்க்குற்றம் நடைபெற்றதாக ஏற்றுக்கொள்கிறீர்களா?

பதில்: எத்தகைய மனித உரிமை மீறல்களாக இருந்தாலும் அவற்றை நாம் விசாரணை செய்கிறோம். எவ்வாறெனினும், ஐ. நா தனது அறிக்கைகளை அனுப்பப்போகிறது. அதன்பின்னர், நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை தீர்மானிப்போம். நாம் ஐ.நா வுடன் செயற்படுவோம். ஐ. நா விசாரணை என்பது சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்வது என்பதல்ல. மனித உரிமை மீறல்கள் நடைபெற்றனவா இல்லையா என்பதை அறிவதுதான்.

கேள்வி: இலங்கை அவசியமானவகையில் ஒற்றையாட்சிக்குரியதா? ஒரு சிங்கள தேசமா? அல்லது எல்லா மக்களையும் உள்ளடக்கிய ஒரு நாடா? முன்னைய ஆட்சியில் இது கேள்விக்குரியதாக இருந்தது. இதில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்பது தொடர்பில் அக்கறைகள் இருக்கின்றன.

பதில்: 13 ஆவது சட்ட திருத்தம் தற்போதைய யாப்புக்கமைவானது , இந்தியாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது ஒற்றையாட்சிக்குரியது இலங்கையர்களைக் கொண்டது. சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் அனைவருக்குமான நாடு இது. இது இங்கு எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கேள்வி: தேர்தல் பிரசார காலத்தில் ராஜபக்ஸவுக்கு எதிராக நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர் நீதி விசாரணைகளை எதிர்கொள்வாரா? அல்லது ஏதேனும் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளதா?

பதில்: நாம் எல்லாவற்றையுமே ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். நடவடிக்கை எடுக்கவேண்டி இருந்தால் நாம் அதனை மேற்கொள்வோம்.

கேள்வி: பிரதமர் என்ற வகையில் தற்போது உங்கள் முன்னால் உள்ள பெரும் சவால் என்ன ?

பதில்: அரசியலமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதும் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதுமே ஆகும்.