செய்திகள்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ்க் கலைஞர்களுக்கு வாய்ப்பு

 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்த் தேசிய சேவையான தென்றல் குஆஇ பிராந்திய சேவையான யாழ் குஆஇ பிறை குஆ ஆகிய சேவைகளில் புதிதாக இயற்றப்பட்டு இசையமைத்து உருவாக்கப்பட்ட பாடல்களை ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டுத்தாபனத் தலைவர் சட்டத்தரணி நந்தமுத்தெட்டுவேகம, பணிப்பாளர் நாயகம் ஏரானந்த ஹெட்டியாராச்சி ஆகியோரின் ஆலோசனைக்கமைய தமிழ்ச்சேவைப் பணிப்பாளர் ஆர்.கணபதிப்பிள்ளையின் வழிநடத்தில் சிவசங்கர் கணேஷின் தயாரிப்பில் தினமும் மெல்லிசைப் பாடல்கள் ஒலிபரப்பப்பட ஆவன செய்யப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியல் பாடல் இயற்றும் திறமையுள்ளவர்களிடமிருந்து சுயகற்பனையில் உருவான பாடல்கள் எதிர்பார்க்கப்படுவதுடன் பாடும் மற்றும் இசையமைக்கும் திறமையுள்ளவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பாடல்களையும் விண்ணப்பங்களையும் பணிப்பாளர் தமிழ்ச்சேவை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் த.பெ.இல 574, கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.