செய்திகள்

இலங்கை கடலுணவுகளில் சீனா ஆர்வம்

இலங்கையின் கடலுணவுகளை இறக்குமதி செய்வதற்கு சீனாவின் யுனான் மாகாணம் ஆர்வம் காட்டி வருவதாக மாகாண உதவி ஆளுனர் காவோ சூசன் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது சீன – தெற்காசிய எக்ஸ்போ மற்றும் 23வது குன்மிங் இறக்குமதி, ஏற்றுமதி சந்தையின் ஆரம்ப ஊடகச் சந்திப்பிலேயே, சீனாவின் யுனான் மாகாண ஆளுனர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீனாவில்- குறிப்பாக, யுனான் மாகாணத்தில் இலங்கை கடலுணவுகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

பங்களாதேஸ், மியான்மாரில் இருந்து கடலுணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும், இலங்கையின் கடலுணவுப் பொருட்களுக்கு சீனாவில் வரவேற்பு அதிகம்.

இதையடுத்து இலங்கையிலிருந்து இருந்து பெருமளவில் கடலுணவுகளை யுனான் மாகாண அரசாங்கம் இறக்குமதி செய்யவுள்ளது.