செய்திகள்

இலங்கை கால்பந்து அணியில் யாழ். மகாஜனக் கல்லூரி மாணவிகள்

பங்களாதேஷில் நடைபெறவுள்ள 19 வயதின் கீழ் பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து தொடரில் இலங்கை அணியில் யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி சி.தர்மிகா, உ.யோகிதா, கிரிசாந்தினி, ம.வலன்ரீனா ஆகிய நால்வரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த மாதம் 11 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இந்த கால்பந்து தொடர் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்கவுள்ளன.

அத்துடன் இலங்கை அணியின் பொறுப்பாசிரியராக மகாஜனக் கல்லூரியை சேர்ந்த பத்மநிதி செல்லையா நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-(3)