செய்திகள்

இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக ஆராய விசேட குழு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பாக ஆராயவென விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சரினால் நேற்றைய தினம் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மூன்று அங்கத்தவர்களை கொண்டதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதுடன். இவர்கள் கடந்த நிறைவேற்றுக் குழுவின் காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக ஆராய்ந்து அமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.