செய்திகள்

இலங்கை குறித்தர ஐ.நா. நடவடிக்கைகளுக்கு ஜோன் கெரி வரவேற்பு

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை  என அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 28ம் அமர்வு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் அதன் உயர்மட்ட கூட்டமொன்றில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மாற்றம் ஏற்படுத்த இலங்கைக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் தெரிவித்த அவர், இலங்கை பர்மா போன்ற நாடுகளின் தலைவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த ஒர் சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச சமூகம் புரிந்து கொண்டுள்ளதாகவும், மீறல்களில் ஈடுபடுவோர் கடுமையான அழுத்தங்களை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் தனது உரையில் எச்சரித்தார்.