செய்திகள்

இலங்கை சிறைகளில் 237 அரசியற்கைதிகள் மாத்திரம் உள்ளனர் என்றால், காணமற்போனவர்கள் எத்தனைபேர்?

 Asian Correspondent இணையத் தளத்துக்காக ஜே. எஸ். திசநாயகம் எழுதிய கட்டுரை (தமிழில்  சமகளம் செய்தியாளர்)

இலங்கை அரசாங்கத்தின் சிறைகளில் 237 அரசியற்கைதிகள் மாத்திரமே உள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான அறிவிப்பிற்கு பின்னர் அரசியற் கைதிகள் குறித்து புதிய கேள்விகள் எழுந்துள்ளன.

காணமற்போனவர்களின் குடும்பத்தினர் இதனை விட அதிகமானவர்கள் அரசாங்கத்திடம் இருக்கவேண்டும் என்கின்றனர்.
மேலும் இந்த அறிவிப்பு பலவந்தமாக காணமற்போகச்செய்தல் போன்ற பாரிய மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்வர்களுக்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுக்ககூடிய நீதிசார்ந்த செயற்பாடுகளால் நீதிகிடைக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சனத்தொகையில் பெரும்பான்மையாகவுள்ள சிங்களவாகளுக்கும், சிறுபான்மையினரான தமிழர்களிற்கும் இடையிலான இலங்கையின் உள்நாட்டு யுத்தம் மே -2009 ம் திகதி இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளை தோற்கடித்தவுடன் முடிவிற்கு வந்தது.

30 வருடகால உள்நாட்டு யுத்தம், பலவந்தமாக காணமற்போகச்செய்யப்படுதல், அரசியற்கைதிகள் சித்திரவதை,பாலியல் வல்லுறவு போன்ற பாரிய மனித உரிமை மீறல்களை உள்ளடக்கியிருந்தது.

யுத்தத்தின் இறுதி மாதங்களில் மாத்திரம் 40000 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் யுத்தகுற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Jail 3_CI
மோதல்கள் நடைபெற்ற வேளையிலும் அதன் பின்னரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பின்னர் காணமற்போதல் என்பது வழமையான விடயமாக காணப்பட்டது.

கடத்தப்பட்டவர்களில் பலர் பின்னர் கைதுசெய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. அரசாங்கத்தினால் தடுத்துவைக்கப்பட்ட பலர் பின்னர் காணமற்போயினர்.

இதன் காரணமாகவே 237 அரசியற்கைதிகள் மாத்திரம் உள்ளனர் என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு முக்கியமானதாக அமைகின்றது. யூன் 8 திகதி இலங்கையிலிருந்து வெளியாகும் ஐலண்டில் 237 அரசியற்கைதிகள் குறித்த தகவல் வெளியாகியிருந்தது.குறிப்பிட்ட பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை தெரிவித்தார்.

யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் கைதுசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர், அல்லது நீதிமன்றம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் கைதுசெய்யப்பட்ட என விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்ட விடயம்,விடுதலைப்புலிகளும், தமிழ்மக்களும் தடுத்துவைக்கப்பட்ட இருவேறு சூழ்நிலைகளை புலப்படுத்துகின்றது.

முதலாவது குழுவினர் 30 வருடகால ஆயுத மோதலின்போது பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக அல்லது பயங்கரவாதத்திற்கு உதவியதாக, ஆதரவளித்ததாக குற்றம்சாட்டப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், நபர்களை குற்றச்சாட்டை சுமத்தாமலே சந்தேகத்தின் கீழ் நீண்ட காலத்திற்கு தடுத்துவைக்க முடியும்.

யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் உடனடியாக கைதுசெய்யப்பட்வர்கள் என அமைச்சர் குறிப்பிட்டது, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து அரசகட்டுப்பாட்டுப்பகுதியை நோக்கி வரும்வேளை iதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்களையாகும்யுத்தம் முடிவிற்கு வரும் வேளையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து பொதுமக்களும் அரச படையினரால் தடுத்துவைக்கப்பட்டனர்.

பின்னர் விடுதலைபுலிகள் இயக்க உறுப்பினர்ர்கள் என அரசு கருதியவர்களை புனர்வாழ்வு முகாம் என்ற அழைக்கப்பட்ட இடத்திற்கு அரசு அனுப்பியது.300,000ற்க்கும் மேற்பட்ட ஏனைய மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

தங்கள் குடும்பத்தவர்கள் அரச படையினரால் கைதுசெய்யப்படுவதை கண்ணாற்கண்ட பலர் பின்னர் அவர்கள் காணமற்போயுள்ளமை குறித்து சாட்சியமளித்துள்ளனர் இவர்களில் வடமாகாணசபை உறுப்பினர் ஆனந்தியும் ஓருவர். அவரது கணவர் எழிலன் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவரை பற்றிய தகவல்எதுவும் இல்லை.

poliiiTNA524FA

காணமற்போவதற்கு முன்னர் சிலர் அரசபடையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை எடுக்கப்பட்ட புகைப்படங்களும் உள்ளன.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட பிரசுரம் ஓன்றில் தனது மகன் புனர்வாழ்வு முகாமில் இருக்கும் படம் காணப்பட்டதாக தெரிவிக்கும் ஜெயகுமாரி பாலேந்திரன் இதன் காரணமாக தன் மகன் உயிருடன் இருக்கலாம் என்கிறார்.

அதேபோன்று செல்வநாயகம் என்பவரின் படம் தேர்தல் பிரச்சார கையேடு ஓன்றில் காணப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி தொடர்ந்தும் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்படுபவர்கள் குறித்தும் அமைச்சரின் அறிவிப்பு உண்மையை மறைப்பதாக அமைந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் காணப்பட்ட கைதுகள்,தடுத்துவைக்கப்படுதல், படுகொலைசெய்யப்படுதல்,மேலும் இவற்றை செய்தவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படுதல் போன்றவை காணப்பட்டதன் காரணமாக , காணமற்போனவர்களின் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தினர் உயிருடன் உள்ளனரா அல்லது கொல்லப்பட்டுவிட்டனரா என்பதை அறியமுடியாத நிலையில் வாழ்ந்தனர்.

ஜனவரி 8 ம் திகதி தேர்தல் முன்னாள் ஜனாதிபதி தோற்கடிக்கப்படுவதையும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாவதையும் உறுதிசெய்தது.மைத்திரிபால சிறிசேன கூட்டணிக்கட்சிகளின் அதரவுடனயே தெரிவுசெய்யப்பட்டார்.இந்த கூட்டணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அக்காலப்பகுதியில் அரசியல்கைதிகள் குறித்த விடயத்தை மிகமுக்கியமான தாக கருதி புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தது. எனினும் அரசாங்கம் தன்னிடம் உள்ள அரசியற்கைதிகளின் எண்ணிக்கை குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையின் டெய்லிநியுசிற்கு வழங்கியுள்ள பேட்டியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,300 தமிழ் அரசியல் கைதிகள் வரை உள்ளதாக தெரிவித்துள்ளார்.ஆனால் அவர் தனது அறிக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள் குறித்து மாத்திரமே கருத்து தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 20 திகதி கொழும்பு மிரரிற்கு கருத்து தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் 700 ற்கும் மேற்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் இரகசிய முகாம்கள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ள அவர் இங்கேயே தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவ்வாறான முகாம்கள் எதுவும் இல்லை என மறுத்தாலும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இரகசிய முகாம்களின் இருப்பை நிராகரிக்க மறுக்கின்றார். இரகசிய முகாம்கள் இருந்தால் அவற்றை மூடிவிட்டு அங்குள்ளவர்களை விடுவிக்க முடியும் என அவர் நியயோர்க் டைம்ஸிற்கு தெரிவித்திருந்தார். தமிழ்தேசிய கூட்டமைப்பு 300 அரசியல்கைதிகள் குறித்து மாத்திரமா அரசாங்கத்துடன் பேசுகின்றது என்பது முக்கியமான கேள்வியாக காணப்படுகின்றது?

அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் ஏனைய ஆயிரக்கணக்கானவர்களின் நிலையென்ன?அவர்களது குடும்பத்தவர்களிற்கு கூட்டமைப்பு என்ன பதிலை தெரிவிக்க போகின்றது?அரசாங்கம் இரகசிய முகாம்கள் இல்லை என தெரிவித்தால் , அவ்வாறான முகாம்கள் உள்ளன என நிரூபிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன நடவடிக்கையை எடுக்கபோகின்றது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை தமிழ்தேசிய கூட்டமைப்பு கோரவுள்ளது.அரசியல் கைதிகள்குறித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? அவர்களை விடுவிப்பதற்காக என்ன நடவடிக்கைளை கட்சி எடுக்கப்போகின்றது? போன்ற கேள்விகளை தமிழ்வாக்காளர்கள் கூட்டமைப்பை நோக்கி கேட்காவிட்டால் அது அர்த்தமற்றதாகிவிடும்.

அரசாங்கம் தன்னிடம் 300 அரசியற்கைதிகள் மாத்திரமே உள்ளனர் என உறுதியாக தெரிவித்தால்,காணமற்போன ஏனையவர்களின் நிலை குறித்து அறிவதற்கும், பாதிக்கப்பட்வர்களின் குடும்பத்தினரிற்கு நீதி வழங்குவதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான உறுதியான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது , கொழும்பிற்கு எவ்வாறான அழுத்தங்களை கொடுக்கப்போகின்றது என்பது குறித்தும் தமிழ் மக்கள கூட்டமைப்பிடம் கேள்வி எழுப்பவேண்டும்.
காணமற்போனவர்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியகூட்டமை;பிற்கும் உள்ளது.அனைத்து பொதுமக்களின் சார்பிலும் இதனை முன்னெடுக்கவேண்டிய கடமை அவர்களிற்குள்ளது.

TNA_PRESS2
காணமற்போன ஓருவர் அனுமதியளிக்கப்படாத அல்லது அரசின் கட்டுப்பாட்டின் கீழ்வராத சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதற்காக அரசாங்கத்தின் கடமை முடிந்துவிட்டது என கருதமுடியாது.

எனினும் நியுயோர்க் டைம்ஸிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் ரணில் தெரிவித்த கருத்துக்கள் அரசாங்கம் இவ்வாறே கருதுகின்றது என்பதை புலப்படுத்தியுள்ளது.

காணமற்போன சிலர் உள்ளனர், அவர்களின் பெயர்களை எங்கும் காணமுடியவில்லை என அவர் தெரிவித்தார். இதன் மூலம் அவர்கள் உயிருடன் இல்லை அல்லது நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர் என்பதையே அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்திடம் 300 அரசியல்கைதிகள் மாத்திரமே இருந்தாலும், ஏனையவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர், என தெரிவித்துவிட்டு இத்துடன் இந்த விவகாரம் முடிந்துவிட்டது என அரசாங்கம்கையை விரி;க்க முடியாது.
தங்கள் குடும்பத்தவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்பதை அறிவதற்கு காணமற்போனவர்களின் குடும்பத்தினருக்கு உரிமையுள்ளது,அதேபோன்று அரசாங்கத்திடம் நீதியான விசாரணைகளை கோருவதற்கும் அவர்களிற்கு உரிமையுள்ளது.

அரசாங்கத்தினால் தனது மக்களிற்கான இந்த கடப்பாட்டை நிறைவேற்ற முடியாவிட்டால் சர்வதேச சமூகம் இதனை நிறைவேற்ற முன்வரவேண்டும். காணமற்போனவர்களின் குடும்பத்தினருக்கு நீதியை வழங்கும் விவகாரம், யுத்தகுற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களிற்கு நீதிவழங்கும் பாரிய செயற்பாட்டுடன் தொடர்புபட்டது.இவ்வாறனா குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை விசாரித்து தண்டிப்பதற்கு எவ்வகையான கட்டமைப்புகள் பொருத்தமானவை என்பது குறித்து கடந்த 5 வருடங்களாக கடும் விவாதங்கள் இடம்பெறுகின்றன.

இலங்கை அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறையொன்றே யுத்தகுற்ற விசாரணைகளின் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கவேண்டும் என் வலியுறுத்தி வருகின்றது. எனினும் இவ்வாறான விசாரணைகள் பக்கச்சார்பானவையாக அமையும் என பாhதிக்கப்பட்டவர்களும், சிவில் அமைப்புகளும், சர்வதேசசமூகம் எதிர்த்துவந்ததன் காரணமாக அது தடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பகட்ட அறிக்கையொன்றை தயாரிக்க தொடங்கியது.அந்த அறிக்கை செப்டம்பரில வெளியாகவுள்ளது.

குறிப்பிட்ட அறிக்கையில் நிரப்பப்படாத பக்கங்கள் உள்ளனவா? என ஆராய்ந்த பின்னர் விசாரணைகளிற்கான அத்தியவாசியமான நடவடிக்கைகள், பொருத்தமான நீதிமன்றை தெரிவுசெய்வது,குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பொருத்தமான சட்ட முறையை கண்டுபிடிப்பது ஆகியனவே அடுத்த கட்ட நடவடிக்கைகளாக அமையும்.

ஆனால் இலங்கையின் சிறிசேன அரசாங்கமும் உள்ளுர் பொறிமுறையையே பயன்படுத்தப்போதவாக தெரிவித்து வருகின்றது.ஆனால் பாதிக்கப்பட்டவர்களும், சிவி;ல் சமூகத்தின ஒரு பிரிவினரும், சர்வதேச நீதிமன்றமும்,சர்வதேச நீதிபொறிமுறைகளும் அவசியம் என வலியுறுத்தி வருகின்றனர்.

எனினும் ஜனவரிக்கு பின்னர் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட மேற்குலகு சார்பான அரசாங்கத்தினுடனான ஐக்கியம் காரணமாக அமெரிக்கா இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தக்கூடிய உள்நாட்டு பொறிமுறை குறித்து நம்பிக்கையை வெளியிட்டுள்ளது.தனது இலங்கைக்கான விஜயத்தின் போது அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இலங்கையை இந்த விடயத்தில் ஐக்கிய நாட்டுடன் இணைந்து , ஓத்துழைப்பை வழங்கி செயற்படுமாறு கேட்டுக்கொண்டார்.

இலங்கை அரசாங்கம் தன்னிடம் 300 அரசியற்கைதிகள் மாத்திரம் உள்ளனர் என தெரிவித்திருப்பது, நாங்கள் எதிர்பார்த்ததை விட படுபயங்கரமான ஈவிரக்கமற்ற குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதன் காரமாக சர்வதேச தராதரத்தினை எட்டுவதற்கு உள்நாட்டு நீதி கட்டமைப்புகளிற்கு அவசியமாகவுள்ள சட்ட, நிர்வாக , அரசியல் மாற்றங்களை இலங்கையின் எந்த அரசாங்கமும் ஏற்படுத்தப்போவதில்லை. சர்வதேச நீதிமன்றங்களால் வழங்ககூடிய சர்வதேச நீதியே ஓரேயொரு வழியாகும்.

அரச சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு காமற்போனவர்கள் குறித்து நீதியை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுத்தருமாறு தமிழர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் கோரும் அதேவேளை ஐக்கிய நாடுகளின் உத்தரவாதத்துடன் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளே வெற்றிபெறும் என்பதை அமெரிக்காவிற்கும், மேற்குலகத்திற்கும் உணர்த்துவதற்காக புலம்பெயர் தமிழர்கள் பாடுபடவேண்டியது அவசியம்.