செய்திகள்

இலங்கை ஜனாதிபதியின் பாதுகாப்பில் காணப்படும் அக்கறையின்மை குறித்து கவலை

நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் (தமிழில் சமகளம் செய்தியாளர்)

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பாதுகாப்பு நிபுணர்கள் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளனர்.

ஓரு சம்பவத்தில் அவரது பாதுகாப்பிற்கு என அமைக்கப்பட்டிருந்த வலயத்திற்குள் நபர் ஓருவர் நுழைந்துள்ளார். அதேவேளை அவரது பாதுகாப்பில் கவனக்குறைவுகள் காணப்படுவதை புலப்படுத்தும் மற்றுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

தொழில்சார் தன்மையின்மை, அரசியல்மயப்படுத்தப்பட்ட சூழல்,மற்றும் பாதுகாப்பு குறித்த பொதுவான அக்கறையின்மை என்பனவே இவற்றிற்கு காரணம் என பாதுகாப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  ஏப்பிரல் 25 ம் திகதி இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவை சேர்ந்த சேனக குமார, இலங்கையின் தென்பகுதி நகரான அங்குனுகொலப்பெலசவில் ஜனாதிபதி சிறிசே உரையாற்றவிருந்த பகுதிக்குள் 9எம்எம் பிஸ்டலுடன் நுழைந்துள்ளார்.ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவனர் அவரை முழுமையாக சோதனையிடாமல் உள்ளே அனுமதித்துள்ளனர்.அவர் ஜனாதிபதியின் அமரவிருந்த இடத்திற்கு மிகஅருகில் நின்றிருந்த வேளை விசேட அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் அவரை சோதனையிட்டவேளை கைத்துப்பாக்கி அவரிடமிருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் அவரை உடனடியாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரிடம் ஓப்படைத்துள்ளனர். எனினும் அவர்கள் அவரை விடுவித்துவிட்டனர்.

ஊடகங்களில் இந்த தகவல் வெளியான பின்னரே அவர் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவர் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. ராஜபக்சாக்கள் அவர் தண்ணீர்போத்தலையே கொண்டு சென்றதாக தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் இடம்பெற்று 8 நாட்களுக்கு பின்னர் கொழும்பிற்கு வெளியே நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட சிறிசேன வாகனம் மாறி ஏறினார்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே அது அவரது வாகனமில்லை என்பதை கண்டுபிடித்தார்.

சிறிசேனவின் வாகனதொடரணிகள் வீதிசமிக்ஞைகளில் நிற்பது இன்னொரு ஆபத்தான அறிகுறி.90 வீதமான முக்கியபிரமுகர்களின் படுகொலைகள் வீதிப்போக்குவரத்தின் போதே இடம்பெற்ற என்கிறார்,விசேட அதிரடிப்படையின் முன்னாள் தலைவர் நிமால் லூவ்கே.

ஜனாதிபதி தனது பாதுகாப்பு பிரிவின் தலைவர் எஸ்எம் விக்கிரமசிங்க என்பவரை உடனடியாக மாற்றியிருக்கவேண்டும், ஜனாதிபதியின் முதல் நடவடிக்கையாக அது அமைந்திருக்கவேண்டும் என்கிறார் பாதுகாப்பு குறித்த விடயங்களை எழுதிவரும் பத்திரிகiயாளர் இக்பால் அத்தாஸ்.

விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதியின் கீழ் 9 வருடங்கள் பணிபுரிந்தவர்,முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தவர்கள் மற்றும் அவரது அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில் இவர்களிடமிருந்து அல்லது இவர்களின் கையாட்களிடமிருந்து சிறிசேனவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்கிறார் இக்பால் அத்தாஸ்.
எனினும் குறிப்பிட்ட அதிகாரி பொலனறுவையின் பிரபல குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் மைத்திரிபாலசிறிசேன தொடர்ந்தும் அவரை தனது பாதுகாப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக நீடிக்க அனுமதித்துள்ளார்.

விக்கிரமசிங்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காததற்கு பொலிஸ்- மா அதிபர் மீது குற்றம்சாட்டுகின்றார்,இக்பால் அத்தாஸ்.

psdddமுன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பை வழங்கி வந்த இராணுவ அணியை இராணு தளபதி கலைத்துவிட்டதை சுட்டிக்காட்டும் அத்தாஸ், விக்கிரமசிங்கவிற்கும் மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் காணப்பட்ட நெருக்கத்தை பொலிஸ் -மா- அதிபர் இளங்ககோன் பயன்படுத்தியிருந்தார் எனவும் குற்றம்சாட்டுகின்றார்.

மேலும் முன்னைய அரசாங்கத்தில் ஜனாதிபதி நினைத்ததை நிறைவேற்றும் கருவியாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் செயற்பட்டனர் எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

விழிப்புணர்வின் அவசியம்
பாதூப்பு குறித்து ஓட்டுமொத்த விழிப்புணர்வ அவசியம் என்கிறார் விசேட அதிரடிப்படையின் முன்னாள் தளபதி நிமால் லூவ்கே,
எங்களது காலத்தில் மிகவும் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு குறித்த முக்கிய மான பயிற்சிகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து எங்களுக்கு கிடைத்தன,என குறிப்பிடும் அவர் முதலில் உளவுத்தகவல்களை அடிப்படையாக கொண்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த சரியான மதிப்பீடு அவசியம்,இரண்டாவது குறிப்பிட்ட முக்கிய நபரிற்கு தனக்குள்ள அச்சுறுத்தல் குறித்து தெரிந்திருக்கவேண்டும்,மூன்றாவதாக மக்களுக்கு ஜனாதிபதியின் உயிருக்கு ஆபத்துள்ளது என்ற விடயம் தெரிந்திருக்கவேண்டும் என்கிறார் அவர்.

நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு தனது உயிர் முக்கியமானது என்பதை ஜனாதிபதியும் கருதவேண்டும் எனவும் நிமால் லூவ்கே சுட்டிக்காட்டுகின்றார். விடுதலைப்புலிகளின் எஞ்சியுள்ள உறுப்பினர்கள் மாத்திரம் படுகொலைகளில் ஈடுபடப்போவதில்லை, அதிருப்தியடைந்துள்ள அரசியல் சக்திகளும் இதற்கு முயற்சிக்கலாம்,எவரும் படுகொலைக்கு எவரையும் தூண்டபடலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

55 வருடங்களுக்கு முன்னர் பண்டாரநாயக்கா சோமாராம தேரர் என்ற பௌத்த மதகுருவினால் கொல்லப்பட்டவர் அவரை தூண்டியவர் புத்தரகிட்டதேரர் என்பதையும் அவர் நினைவுபடுத்துகின்றார்.