செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: மோடிக்கான பாடமும் மோடியிடமிருந்தான பாடமும்

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவின் தோல்வியானது இந்தியப் பிரதமர் நரந்திர மோடியிடமிருந்தான ஒரு பாடமாகவும் அதேசமயம் நரேந்திர மோடிக்கான ஒரு பாடமாக அமைவதாகவும் இந்தியாவின் ஸ்க்ரோல் இணையத்தில் ரொஹான் வெங்கட்ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.

பௌத்த தேசியவாதத்தை மஹிந்த ராஜபக்ஸ ஊதி வளத்ர்தமை காரணமாக ஏற்பட்ட பொதுபலசேனாவின் எழுச்சி முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு வித்திட்டு அவர்களது ஆதரவு அவருக்கு இந்த தேர்தலில் இல்லாமல் போய் அவர் தோல்வி கண்டமை மோடிக்கு ஒரு பாடமாக அமைவதாகவும், அதேசமயம், ராஜபக்ஸவின் குடும்ப ஆட்சி காரணமான ஊழல் மற்றும் எதேச்சை அதிகாரம் ஆகியவற்றை பொது அணிகளின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பயன்படுத்தி ராஜபக்ஸவின் நற்பெயரை இல்லாமல் செய்தமை மோடியின் தேர்தல் பிரசாரத்தில் இருந்து அவர் பெற்ற பாடம் என்றும் அவர் எழுதியிருக்கிறார்.