செய்திகள்

இலங்கை தற்போது முழுமையாக சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது – சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

இலங்கை தற்போது முழுமையாக சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.இலங்கை தற்போது முழுமையாகச் சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது என்றும் ஆட்சியாளர்கள் நாட்டை சீனாவிடம் தாரை வார்த்துக் கொண்டிருப்பதாக மேலும் தெரிவித்துள்ளார்.மறைந்த விஜயகுமாரதுங்கவின் 33ஆவது நினைவுதின நிகழ்வு சீதுவயில் அமைந்துள்ள விஜயகுமாரதுங்கவின் நினைவுச் சிலைக்கு அருகில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.இதன்போது, முன்னாள் ஜனாதிபதி, விஜயகுமாரதுங்கவின் நினைவுச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.இதனையடுத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் தனக்கு சீனாவுக்கு எதிராக எதுவும் இல்லை என்று தெரிவித்த சந்திரிகா குமாரதுங்க ஆனால் தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட அனைத்தையும் அழித்துவிட்டது என குற்றம் சாட்டினார்.(15)