செய்திகள்

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் சபை தீவிரமான நடவடிக்கை எடுக்கவேண்டிய நேரம் இது- நவநீதம் பிள்ளை

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் தோல்விகள் தொடர்பில் ஐ. நா மனித உரிமைகள் சபை அதன் வழமையான மெத்தன போக்கில் இருந்து தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஐ. நா மனித உரிமைகள் சபை தீர்மானங்களை அமுல்படுத்தாமை தொடர்பில் இலங்கையை பொறுப்பு கூறலுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

தமிழ் பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்களின் வீடுகள் மருத்துவமனைகள் கோவில்கள் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம் என்று என்றும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி ஆறுமாதங்களும் பலமுறை சர்வதேச தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன.மேலும் நாங்கள் பயங்கரவாத அமைப்பாக கூறுகின்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்களை இலங்கை இராணுவம் அவர்கள் வெள்ளை கொடியை காண்பித்தவேளையிலும் சுட்டுக்கொல்வதை பார்த்திருக்கின்றோம்.

அதேபோன்று பொதுமக்கள் மீதான கடுமையான விமான குண்டுவீச்சுகளையும் அவர்கள் அடைக்கலம் கோரிய இடங்கள் அழிக்கப்பட்டதையும் நாங்கள் பார்த்திருக்கின்றோம்.மேலும், காயமடைந்தவர்களிற்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தவேளை எறிகணை தாக்குதலிற்கு உள்ளான வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் உதவிக்கான இறுதிக்குரலை நாங்கள் செவிமடுத்திருக்கின்றோம்.

இதேவேளை இலங்கை நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்மேலும் தமிழர்களிற்கு எதிரான கடுமையான மனித உரிமை மீறல் குற்றவாளிகளை எந்தவித தயக்கமும் இன்றி பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தவேண்டும்.அத்துடன் கோட்டாபயவின் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் சட்டத்தின் ஆட்சி தோற்கடிக்கப்பட்ட மக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த சர்வதேச தராதரங்கள் ஆகியவற்றின் மீதான யுத்தமாக மாற அனுமதிக்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)