செய்திகள்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நன்னடத்தை விதிகள்

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நன்னடத்தை விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று சபாநகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலக நாடுகள் பலவற்றின் ஆலோசனைகளுக்கமைய, அந்தந்த நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக பின்பற்றப்படும் நன்னடத்தைகளை அடிப்படையாகக்கொண்டு, இந்தப் புதிய விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறிய சபாநாயகர் கூறினார்.

இந்தப் பிரேரணையை நிறைவேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொத்து மற்றும் நிதி விபரங்களை நாடாளுமன்றத்திடம் வெளிப்படுத்துவது, இந்த புதிய விதியில் பிரதானமாக உள்வாங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறினார்.

நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் விஷயங்களுடன் தொடர்புப்பட்டிருக்கும் உறுப்பினர்கள், அதற்கான வாக்கெடுப்பில் பங்குபற்ற முடியாது என்பதும் புதிய விதிகள் தொடர்பான பிரேரணையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டை நல் வழியில் கொண்டுச் செல்வதற்காகவே இந்த நன்னடத்தை விதிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கரு ஜயசூரிய  கூறினார்.

n10