செய்திகள்

இலங்கை பாராளுமன்றத்தில் மோடி உரையாற்றுவார்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 13 ஆம் திகதி இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பாராளுமன்றத்திலும் அன்றைய தினம் உரை நிகழ்த்துவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்காக பாராளுமன்றத்தின் விஷேட அமர்வு ஒன்று அன்றைய தினம் நடைபெறும். இலங்கைப் பாராளுமன்றத்தில் உரையாற்றும் முதலாவது இந்தியப் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொள்வார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் 13 ஆம் திகதி கொழும்பு வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், திருமலை, அநுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கும் மோடி விஜயம் செய்யவுள்ளார்.  மோடியின் வருகைக்கு முன்னோடியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு வருகின்றார்.