செய்திகள்

இலங்கை பிரதமர் திருப்பதி வருகையைக் கண்டித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: நூற்றுக்கணக்கானோர் கைது

இலங்கை பிரதமர் டி.எம்.ஜயரத்னா இந்தியாவிலுள்ள திருப்பதிக்கு வருவதை கண்டித்து மறுமர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் திருத்தணி நகரில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது கறுப்புக்கொடியுடன் திருப்பதி நோக்கி புறப்பட்ட 250க்கும் மேற்பட்ட கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1
துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாவட்டச்செயலாளர்கள் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், பாலவாக்கம் சோமு, வடசென்னை ஜீவன், தென்சென்னை வேளச்சேரி மணிமாறன் மற்றும் முராத் புஹாரி பூவை மு.பாபு, அட்கோமணி, அந்ததிதாஸ், கோதண்டம், பூவை து.கந்தன், தாயகம் தங்கதுரை, காந்தி உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.