செய்திகள்

இலங்கை புறப்பட்டார் சுஷ்மா

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

விஷேட விமானத்தில் இன்று நண்பகல் புதுடில்லியிலிருந்து புறப்பட்ட அவர், இன்று மாலை கொழும்பை வந்தடைவார்.

எதிர்வரும் 13 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடுவதற்கு முன்னோடியாக சுஷ்மா சுவராஜின் வருகை அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.