செய்திகள்

இலங்கை மீனவர்கள் 16 பேர் விடுதலை

இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகியிருந்த 16 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு-ஆந்திரா கடலோர பகுதிகளில் மீன்பிடித்த 7 இலங்கை மீனவர்களை கடலோர காவல்படையினர் கடந்த மாதம் 2ம் திகதி கைது செய்யப்பட்டனர்.

அதே போல் கடந்த 1ம் திகதி தமிழ்நாடு-ஆந்திரா கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்த 9 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 16 இலங்கை மீனவர்களும் சென்னை புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் புழல் சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யுமாறு சிறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து உரிய சான்றிதழ் மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.