செய்திகள்

இலங்கை வந்த சுஷ்மா ஜனாதிபதியுடன் பேச்சு

இரண்டு நாள் விஜயமாக இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை ஜனாதிபதியின் விஜேராம இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இருதரப்பு உறவுகள், இனநெருக்கடிக்கான தீர்வு முயற்சிகள், மீனவர் பிரச்சினை உட்பட பல விடயங்கள் தொடர்பிலும் இருவரும் ஆராய்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.