செய்திகள்

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் எரிபொருள் அட்டை!

இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் வைத்து டொலர்களில் கொள்வனவு செய்யக்கூடிய எரிபொருள் அனுமதி அட்டையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் இதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாகனம் அல்லாத பிற எரிபொருள் தேவைகளுக்கான QR குறியீடுகளை வழங்க பதிவு செய்வதற்கான வசதிகளை வழங்குதல், ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து வியாபாரப் பதிவு இலக்கத்தின் மூலம் பல வாகனப் பதிவு, அரசாங்க வாகனப் பதிவின் சார்பாக அந்த நிறுவனத்திற்கு தனிப்பட்ட பதிவு எண் கொண்ட அனைத்து வாகனங்களையும் பதிவு செய்ய வசதி செய்தல், பெற்றோல் நிலையங்களில் இருக்கும் எரிபொருள் இருப்புக்களை உடனடியாக தெரிந்து கொள்ளும் வசதிகளை உருவாக்குதல், தேவைக்கு ஏற்ப எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கும் வசதி மற்றும் சட்ட விரோதமாக QR குறியீடுகளை அமைத்து பயன்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

-(3)