செய்திகள்

இலங்கை வரும் ஜோன் கெரிக்கு ஒபாமாவை விடவும் அதிக பாதுகாப்பாம்

எதிர்வரும் 2ம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜங்க செயலாளர் ஜோன் கெரிக்கு அந்நாட்டு ஜனாதிபதிக்கு  வழங்கும் பாதுகாப்பையும் விடவும் அதிக பாதுகாப்பை வழங்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 200ற்கும் மேற்பட்ட அமெரிக்க பாதுகாப்பு படையினர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் அவர்களுடன் 40மோப்ப நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 40ற்கும் மேற்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர்களும் இங்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் நடைபெறவுள்ள அமெரிக்க தூதரகத்துக்கான புதிய கட்டிடமொன்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துக் கொள்ளும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஒரு நாள் மாத்;திரமே நாட்டில் தங்கியிருப்பார் என்பதுடன் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.