செய்திகள்

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரிடம் விளக்கம் கோரும் ஐசிசி!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) விளையாட்டு துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க இடமிருந்து இலங்கை கிரிக்கெட் நிறுவகத்தில் இருந்த அரசாங்கத்தின் தலையீடு குறித்து ஒரு முழுமையான விளக்கம் ஒன்றை பெறவுள்ளது.

மேலும் இலங்கை கிரிக்கெட் நிறுவகத்தின் நிர்வாகத் தெரிவிற்கான தேர்தல்கள் வெளிப்படையாகவும் நீதியான முறையிலும் நடைபெற வேண்டும் எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவகம் கலைக்கப்பட்டு இடைக்கால நிர்வாக சபை அண்மையில் நிறுவப்பட்டுள்ளது. இடைக்கால நிர்வாக சபை நிறுவப்பட்டமைக்கான சரியான விளக்கம் அளிக்கப்படும் வரையில் இலங்கைக்கான நிதி உதவிகள் இடைநிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால நிர்வாக சபை நிறுவப்பட்டமை சர்வதே கிரிக்கெட் பேரவையின் சரத்துக்களுக்கு புறம்பான வகையில் அமைந்துள்ளதாக தென்படுகின்றது எனவும் இதன் காரணமாக நிதி உதவிகள் இடைநிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.