செய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு முன் ஆஜராக மாட்டேன் என்கிறார் திஸ்ஸ

முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு முன் ஆஜராக மாட்டேன் என்று தெரிவித்துவருகிறார்.

கடந்த அரசால் வழங்கப்பட்ட அமைச்சு பதவி தொடர்பாகவும், அரசுடன் இணைந்தமை தொடர்பாகவும் போடப்பட்ட முறைப்பாட்டை விசாரிக்க அத்தநாயக்கவை இன்று ஆணைக்குழு அழைத்திருக்கிறது. ஆனால் அவர் விசாரணைக்கு செல்லமாட்டேன் என்கிறார்.

ஐக்கிய தேசியக்கட்சியை விட்டுவிலகி அரசுடன் சேர்ந்து கொள்ளும்போது லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற விசாரணை நடத்தவே ஆணைக்குழு சம்மன் அனுப்பியுள்ளது.