செய்திகள்

இலஞ்ச , ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு

இலஞ்ச , ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்ததிற்கு எதிராக கொழும்பிலுள்ள அந்த ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் ஆணைக்குழுவிற்கு பணிப்பாளராக நியமிக்கப்பட்டவர், 2003 முதல் 2008 வரையான காலப்பகுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றிக்கொண்டு சம்பளம் பெற்று வந்த அதேவேளை தொலைத் தொடர்பு ஒழுங்கப்படுத்தல் ஆணைக்குழுவில் சட்ட ஆலோசகராக பணியாற்றி அங்கும் சம்பளத்தை பெற்று வந்துள்ளதாகவும் இது முறையற்ற செயல் எனவும் இதனால் இவர் குறித்த பதவிக்கு தகுதியற்றவர் எனவும் தெரிவித்து தமது முறைப்பாட்டை அந்த எம்.பிக்கள் ஆணைக்கழுவின் தலைவரிடம் கையளித்துள்ளனர்.