செய்திகள்

இலஞ்ச ஒழிப்பு ஆணையாளர் கீர்த்தி விமலச்சந்திர இராஜினாமா

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான கீர்த்தி விமலச்சந்திர, தனது, இலஞ்ச ஒழிப்பு ஆணையாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அவர், தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் செயலாளர் டபிள்யூ.ஏ.டீ.பி. லக்ஷ்மனிடம் நேற்றைய தினம் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.