செய்திகள்

“இலண்டன் தமிழர் சந்தை – 2016” கோலாகலமாக ஆரம்பம்

கடந்த வருடம் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்றிருந்த “இலண்டன் தமிழர் சந்தை” நிகழ்வு லண்டனில் சற்று முன்னர் மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பமாகி இருக்கிறது.

Harrow Leisure Centre இல் நடைபெறும் இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இன்றும் நாளையும் நடைபெறும் இந்த நிகழ்வு காலை 10 மணி மாலை 8 மணி வரை நடைபெறும்.

இந்த நிகழ்வை லண்டன் ஹரோ நகர பிதா சுரேஷ் கிருஷ்ணா ஆரம்பித்து வைத்தார். வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனின் வீடியோ மூலமான உரை நடைபெற இருக்கிறது.

150க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தமது பொருட்களையும் சேவைகளையும் காட்சிப்படுத்துகின்றன.

அத்துடன் ஆடல், பாடல், வேடிக்கை நிகழ்வுகள், வினோத நிகழ்வுகள், ஆடை-அலங்கார காட்சிகள் என்று நடைபெ ற இருக்கின்றன. இந்த நிகழ்வுகளில் ஐரோப்பாவில் இருந்து மட்டுமன்றி இந்தியா மற்றும் ஐரோப்பாவில் இருந்து கலைஞர்கள் வந்து கலந்துகொண்டுள்ளார்கள். பல விலை கழிவுடன் கூடிய விற்பனைகளும் இந்த நிகழ்வில் வழங்கப்படுகின்றன. கட்டணமாக £3 மட்டுமே அறவிடப்படுகிறது.

கடந்த வருடம் சுமார் 6000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் பிரித்தானியாவின் பல இடங்களில் இருந்தும் வந்து இந்த நிகழ்வுகளை பார்வையிட்டிருந்தார்கள். இந்த நிலையில் இவ்வாண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாபெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான லிபரா இந்த நிகழ்வுக்கு உத்தியோகபூர்வ அனுசரணை வழங்குகின்றது. அத்துடன் LINKS LEGAL SOLICITORS , CARLTON LEISURE மற்றும் RUBY CATERING ஆகியவையும் இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்குகின்றன.

Alpha Telecom, Vannakam London, Accountancy Group, Conversation-v, JNL, LongTek, Tamil Diplomat.com, samakalam.com மற்றும் Cartec Graphics ஆகியவையும் இந்த நிகழ்வுக்கு தமது அனுசரணையை வழங்குகின்றன.

WP_20160409_002 WP_20160409_003IMG_0980 IMG_0968 IMG_0972 IMG_0977