செய்திகள்

இலவச கண் மருத்துவ முகாமில் 66 பேர் கண் பார்வை இழந்தார்கள்

விழுப்புரத்தில் ஜோசப் கண் மருத்துவமனையின் சார்பில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில் 66 பேர் கண் பார்வை இழந்தார்கள் . அந்த வழக்கின் இறுதி விவாதம் நேற்று திருச்சி தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதர் முன்னிலையில்  நடைபெற்றது

பாதிக்கப்பட்ட மக்களுக்குக்காக சிபிஐ சார்பில் மதுரை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் கண்ணன் ஆஜர் ஆனார்  ஜோசப் மருத்துவமனை சார்பில் வழக்கறிஞர் சித்ரா ஆஜா் ஆனார்.

தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 1இலட்சம் வழங்கி வழக்கை முடித்து வைத்தது  பாதிக்கப்பட் மக்களுக்கு நிவாரண உதவி மட்டும் கொடுப்பது சரியில்லை என்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் பாதிக்க பட்ட மக்களுக்கு மதுரை உயர்நீதி மன்றத்தில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று 2009  மதுரை நீதிமன்றம் வழக்கு தொடுக்க விசாரித்த நீதிபதி இக்பால் சிபிஐ விசாரிக்க  உத்தரவிட்டர்.
பாதிக்கப்பட்டவர்களின் இறுதி வாதம் இன்னும் முடிவடையாத நிலையில் எழுத்துபூர்வமான வாதத்தை முன் வைக்க வழக்கை எதிர்வரும் 10.04.2015 அன்று மாற்றிவைத்து அன்று இறுதி வாதம் முடிந்த பின்பு தீர்ப்பு தேதியை அறிவிப்பதாக கூறினார்.