செய்திகள்

இளம் பெண் சட்டத்தரணி சடலமாக மீட்பு

அம்பாறை- அக்கரைப்பற்று 9ஆம் பிரிவைச் சேர்ந்த இளம் பெண் சட்டத்தரணியான லோ.நிதர்சினி (வயது-27) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (21) இரவு 10 மணியளவில் இந்த சடலம் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று  பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

n10