செய்திகள்

இளவாலையில் இடம்பெற்ற யாழ் திருமறைக் கலாமன்றத்தின் இளைஞர் உருவாக்கல் செயற்திட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில்; கெயார்; நிறுவனத்தின் பங்கேற்புடன் யாழ் திருமறைக் கலாமன்றம் நடைமுறைப்படுத்தும் ‘கலையால் பயன் செய்வோம்’என்ற இளைஞர் உருவாக்கல் செயற்றிட்டத்தின் சமூகமட்ட பாரம்பரிய கலைகளின் அரங்க அளிக்கை நிகழ்வு ‘கலைப்பொழுது’ என்ற பெயரில் இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி திறந்தவெளி அரங்கில் கடந்த 07.03.2015 சனிக்கிழமை மாலை 05:30 மணிக்கு இடம்பெற்றது.

2செயற்றிட்டத்தில் இணைந்து அடிப்படை அரங்கப் பயிற்சிகளை நிறைவுசெய்த இளையோர்களது ஆற்றுகைகள் பல அரங்கேறின. குறிப்பாக இன்னிய வாத்திய இசை,பாரம்பரிய கூத்துவழிநடனங்களைக் கொண்டதமிலாடல்,வேப்பிலைநடனம்,கோலாட்டம்,நாடகம் மற்றும் குவேனி தென்மோடிநாட்டுக்கூத்து என்பன பார்வையாளர்களிடத்தே பெரிதும் வரவேற்பினைப் பெற்றநிகழ்வுகளாகும்.
‘கலைப்பொழுது’ நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் திரு.முரளிதரன்,வடமாகாண கல்வித்திணைக்களத்தின் அழகியல் பிரிவின் பணிப்பாளர் திருமதி மதிவாணி விக்னராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் சர்வமததலைவர்களும் கலைநிகழ்வுகளோடு இணைந்திருந்தனர்.

1சமூக மட்ட பாரம்பரியக்கலைகளின் அளிக்கை நிகழ்வானது பிரதேசகலாசார உத்தியோகத்தர்கள்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் மற்றும் இளவாலை திருமறைக் கலாமன்றம் என்பவற்றின் கூட்டுஒத்துழைப்பில் ஒழுங்கு செய்யப்பட்;டு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில்; கெயார்; நிறுவனத்தின் பங்கேற்புடன் யாழ் திருமறைக் கலாமன்றம் நடைமுறைப்படுத்தும் ‘கலையால் பயன் செய்வோம்’என்ற இளைஞர் உருவாக்கல் செயற்றிட்டத்தின் சமூகமட்ட பாரம்பரிய கலைகளின் அரங்க அளிக்கை நிகழ்வு ‘கலைப்பொழுது’ என்ற பெயரில் இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி திறந்தவெளி அரங்கில் கடந்த 07.03.2015 சனிக்கிழமை மாலை 05:30 மணிக்கு இடம்பெற்றது.
செயற்றிட்டத்தில் இணைந்து அடிப்படை அரங்கப் பயிற்சிகளை நிறைவுசெய்த இளையோர்களது ஆற்றுகைகள் பல அரங்கேறின. குறிப்பாக இன்னிய வாத்திய இசை,பாரம்பரிய கூத்துவழிநடனங்களைக் கொண்டதமிலாடல்,வேப்பிலைநடனம்,கோலாட்டம்,நாடகம் மற்றும் குவேனி தென்மோடிநாட்டுக்கூத்து என்பன பார்வையாளர்களிடத்தே பெரிதும் வரவேற்பினைப் பெற்றநிகழ்வுகளாகும்.

3‘கலைப்பொழுது’ நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் அவர்களும்,சிறப்பு விருந்தினர்களாக சண்டிலிப்பாய் பிரதேசசெயலர் திரு.முரளிதரன்,வடமாகாண கல்வித்திணைக்களத்தின் அழகியல் பிரிவின் பணிப்பாளர் திருமதி மதிவாணி விக்னராஜா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுடன் சர்வமததலைவர்களும் கலைநிகழ்வுகளோடு இணைந்திருந்தனர்.
சமூக மட்ட பாரம்பரியக்கலைகளின் அளிக்கை நிகழ்வானது பிரதேசகலாசார உத்தியோகத்தர்கள்,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் மற்றும் இளவாலை திருமறைக் கலாமன்றம் என்பவற்றின் கூட்டுஒத்துழைப்பில் ஒழுங்கு செய்யப்பட்டுடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.