செய்திகள்

இளவாலை பொலிஸ் நிலையம் முன்பாக மறியல்! காணியை விடுவிக்கக் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இளவாலைப் பொலிஸ் நிலையம் அமைந்துள்ள காணிகளையும், வீடுகளையும் விடுவிக்கக்கோரி அவற்றின் உரிமையாளர்கள் பொலிஸ்நிலையத்துக்கு முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 06

13 வீடுகளையும், 8 விவசாயக்காணிகளையும் உள்ளடக்கி இளவாலைப் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காணிகளையும் வீடுகளையும் விடுவிக்கக்கோரியே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இளவாலைப் பங்கு தந்தை ஜெயரஞ்சன் அடிகளார் தலைமையில் பொலிஸ் நிலையத்தின் முன்பாகக் கூடிய மக்கள், தமது வீடுகளை விடுவிக்கக்கோரி சுலோக அட்டைகளைத் தாங்கி நின்றனர்.

வீடுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்த உத்தரவாதத்தையடுத்து ஆர்ப்பாட்டம் பின்னர் கைவிடப்பட்டது.