செய்திகள்

இளைஞன் கைது

பாடசாலையிலிருந்து வீடு நோக்கி சென்று கொண்டிருந்த மாணவி கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவிற்குற்படுத்தப்பட்டமை குறித்து, 34வயது நிரம்பிய திருமணமான இளைஞன் இன்று இரவு எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெமோதரை தமிழ் வித்தியாலயத்தின் ஆண்டு நான்கில் கல்வி கற்று வந்த 9வயது நிரம்பிய மாணவியே இவ்வாறு பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டவராவார்.

 அம்மாணவி, ஆபத்தான நிலையில் தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

 எல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற, மேற்படி சம்பவம் குறித்த புகாரையடுத்து, பள்ளக்கட்டுவையைச் சேர்ந்த 34வயது நிரம்பிய திருமணமான இளைஞன் எல்ல பொலிஸாரினால், 04.04.2016 அன்று இரவு கைது செய்யப்பட்டார்.

 கைது செய்யப்பட்ட இளைஞன், பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் 05.04.2016 அன்று ஆஜர் செய்யப்பட்டதும், எதிர்வரும் 11ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டார்.

n10