செய்திகள்

இளைஞர்குழு அட்டகாசம்: பொலிஸ் ரோந்தைக் கோரும் வவுனியா மக்கள்

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் இளைஞர்குழு மாலை வேளைகளில் தினமும் அட்டகாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, வைரபுளியங்குளம் பகுதியில் தனியார் கல்வி நிலையங்கள் பல அமைந்துள்ளதால் அக் கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவிகளுடன் இளைஞர்கள் சேட்டை செய்வதாகவும், இரவு நேரங்களில் வீடுகளுக்கு கல் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தனியார் கல்வி நிலையம் வரும் மாணவிகள் பலர் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கல்விநிலையங்கள் இயங்கும் மாலை வேளைகளில் அப்பகுதியில் பொலிசாரை ரோந்து நடவடிக்கையில் அல்லது கடமையில் ஈடுபடுத்துமாறு பிரதேச சிவில் குழுக் கூட்டத்தில் மக்களால் கோரப்பட்ட நிலையில் குறிப்பிட்ட சில நாட்கள் ரோந்து நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டதாகவும் தற்போது அவர்கள் அப்பகுதியில் கடமையில் ஈடுபடுவதில்லை எனவும் அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

N5