செய்திகள்

இளைஞர் குழுவின் சண்டையை தடுக்க முற்பட்ட பொலிசார் மீது தாக்குதல்: காயமடைந்த பொலிசார் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா, கல்மடு, பூம்புகார் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்’ட சண்டையை தடுக்கு முற்பட்ட பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமையால் காயமடைந்த பொலிசார் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, கல்மடு, பூம்புகார் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றது. இதன்போது இரு இளைஞர்கள் குழுக்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதன்போது அங்கு கடமையில் நின்ற ஈச்சங்குளம் பொலிசார் குறித்த முரண்பாட்டை சமரசம் செய்து வைத்து தடுக்க முற்பட்ட வேளை பொலிசார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பொலிசார் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா, ஈச்சங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

N5