செய்திகள்

இளையராஜா, சமுத்திரக்கனி, ‘விசாரணை’ படத்துக்கு தேசிய விருது

‘தாரை தப்பட்டை’ திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது இளையராஜாவுக்கும், சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது ‘விசாரணை’ திரைப்படத்திற்கும் கிடைத்துள்ளது.

63வது தேசிய திரைப்படத்துக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.

சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ படம் தட்டிச் சென்றது. மேலும், ‘விசாரணை’ படத்தின் படத்தொகுப்பாளர் மறைந்த கிஷோருக்கு சிறந்த படத்தொகுப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘விசாரணை’ படத்தில் நடித்த சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜா இசையமைத்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இறுதிச் சுற்று’ படத்தில் சிறப்பாக நடித்த ரித்திகா சிங்கிற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

n10