செய்திகள்

இழுவைப் படகு மீள்பிடியை தடை செய்ய வேண்டும்: சுமந்திரன் பிரேரணை

இலங்கையின் கடல் எல்லைக்குள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது தடை செய்யப்பட வேண்டும் என்ற பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் முன்வைத்திருக்கின்றார்.

கடற்றொழில் சட்டத்தில் திருத்தத்தைச் செய்வதன் மூலம் இலங்கைக் கடல் எல்லைக்குள் இழுவைப்படகு பயன்படுத்திதுவது தடைப்பட வேண்டும். இவ்வாறு பயன்படுத்துபவர்களுக்கு 2 வருட சிறை அல்லது 40,000 ரூபா அபாராதம் விதிக்கப்பட வேண்டும் என சுதந்திரன் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் முன்வைத்துள்ள பிரேரணை அடுத்த வாரம் வர்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும் எனவும் தெரியவந்திருக்கின்றது.

இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பாலும், இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி அவர்கள் மீன்பிடிப்பதாலும், வடபகுதியிலுள்ள மீனவர்கள் அதிகளவுக்குப் பாதிக்கப்படும் நிலையிலேயே இந்தப் பிரேரணையை தனிநபர் பிரேரணையாக சுமந்திரன் முன்வைத்திருக்கின்றார்.