செய்திகள்

இவரை மரபணு சோதனைக்குட்படுத்தவேண்டும்

ஓரு நாள்போட்டிகளில் மிகவேகமாக ; சதத்தை(31பந்துகளில்) பெற்று சாதனை புரிந்துள்ள தென்னாபிரிக்காவின் ஏ.பி டிவில்லியர்ஸ் குறித்து கிரிக்கெட் உலகத்தினரின் கருத்து
மேற்கிந்திய அணியினருக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் 44 பந்துகளில் 16 சிக்சர்கள் ஒன்பது பவுண்டரிகள் அடங்கலாக 149 ஓட்டங்களை பெற்றார்.

உலகின் தலைசிறந்த இனிங்ஸ் எந்த வித சந்கேமும் இல்லைபிரென்டன் டெய்லர்- சிம்பாவே
உலகில் எவரும் அவரின் இந்த சாதனையை முறியடிக்கபோவதில்லை-டீன் ஜோன்ஸ்- அவுஸ்திரேலியா,
டிவில்லியர்சினை மரபனு சோதனைக்கு உட்படுத்தவேண்டும், கிரிக்கெட் மனிதர்களுக்கானது.அவர் அதிமானுடன் போல தோன்றுகிறார்-ஆகாஸ் சொப்ரா- இந்தியா
ஹசிம் அம்லா அளவிற்கு இந்த போட்டியில் அவர் பந்துகளை எதிhகொண்டிருந்தால் நிச்சயம் 450 அடித்திருப்பார்- பென் லாப்லின்.
ஜீனியஸ் என்ற வார்த்தைக்கு முற்றிலும் பொருத்தமானவர் அவர்- ரொபின் பீட்டர்சன்-தென்னாபிரிக்கா,
நாங்கள் நேரடி ஓளிபரப்பை பார்க்கிறோமா அல்லது ஹைலைட்சை பார்க்கிறோமா-அசார் முகமட்