செய்திகள்

இஸ்ரேலியர்களை காரால் மோதி தாக்கிய பாலஸ்தீனியர்- ஜெருசலேத்தில் பரபரப்பு

பாலஸ்தீனியர் ஒருவர் இஸ்ரேலிய எல்லைக்காவற் படைவீரர்கள் மீது தனது காரை மோதி தாக்கியதில் நான்கு பெண்பொலிஸார் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
கிழக்கு ஜெருசலேம் வீதியnhன்றில், இஸ்ரேலின் எல்லை காவல் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கார் மூலம் தாக்கிய பின்னர் அதிலிருந்து இறங்கி கத்தியால் குத்தமுற்பட்ட பாலஸ்தீனியரை பொலிஸார் சுட்டுக்காயப்படுத்தி கைதுசெய்துள்ளனர்.இவர் கிழக்கு ஜெரூசலேமை சேர்ந்தவர் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என கருதுவதாக தெரிவித்துள்ள பொலிஸார்,திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இதுவெனவும் குறிப்பிட்டுள்ளனர்.தாக்குதலை மேற்கொண்ட நபர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
யூதர்களின் புரிம் பண்டிகை தினத்தன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த வருடம் ஓக்டோபர், நவம்பர் மாதங்களில் இவ்வாறான பல தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.நகர வீதிகளில் யூதர்களை இலக்குவைத்து பல பாலஸ்தீனியர்கள் தங்கள் வாகனங்களால் மோதியிருந்தனர். இது தவிர பேருந்தில் பயணம்செய்துகொண்டிருந்த யூதர்கள் மீது பாலஸ்தீனியர் ஓருவர் கத்தியால் குத்தி பலரை காயப்படுத்தியிருந்தார்.