செய்திகள்

இஸ்ரேலிய இராணுவத்தினர் மீது லெபனான் எல்லையில் தாக்குதல்

இஸ்ரேல் லெபனான் எல்லையில் இஸ்ரேலிய படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4பேர் காயமடைந்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய ஷெபா பார்ம் பகுதியில் இஸ்ரேலிய இராணுவ வாகனமொன்று டாங்கி எதிர்ப்பு ஏவுகணை தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது
ஹிஸ்புல்லா அமைப்பினர் இதற்கு உரிமை கோரியுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக தென்லெபான் மீது இஸ்ரேல் ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேலிய படையினரை கடத்துவதற்கு முயற்சிகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவது குறித்து ஆராய்ந்துவருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலின் வட எல்லைக்கு அருகில் டாங்கி எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எமது மக்களின் அமைதியான பாதகாப்பான வாழ்வை குழப்புவதற்கு பயங்கரவாதிகளுக்கு இடமளிக்க மாட்டோம், எமக்கு சவால் விட நினைப்பவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
இதேவேளை இஸ்ரேல் இதன் பின்னர் 13 ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.