செய்திகள்

இஸ்லாமிய வங்கிக்கு எதிராக பொது பாலசேனா மத்திய வங்கியில் முறைப்பாடு

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர்  இன்று கொழும்பில் அமைந்துள்ள மத்திய வங்கிக்கு சென்று முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டில் காணப்படும் இஸ்லாமிய வங்கிகளுக்கு எதிராக முறைப்பாடு செய்யவே அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.
நிதியியல் கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் குறித்த வங்கிகளை அமைக்க முடியாது எனவும் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ள வங்கிகள் அந்த சட்டத்திற்கு முரணானது எனவும் இது தொடர்பாக ஆராயுமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.