செய்திகள்

இ.தொ.க பொதுத் தேர்தலில் மைத்திரி அணியுடன் இணைந்து போட்டியிட முடிவு

ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று கொழும்பில் ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரைரயாடியுள்ளதாக இ.தொ.க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி சில இடங்களில் தனித்தும் மற்றைய இடங்களில் மைத்திரிபால தலைமையிலான குழுவிலும் போட்டியிடுவதற்கு இ.தொ.க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மனோ கனேஷன் , திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.