செய்திகள்

இ.போ.ச – தனியார் போக்குவரத்து துறையினர்யிடையே கிளிநொச்சியில் கைகலப்பு (படங்கள்)

இலங்கை போக்குவரத்துச் சபை கிளிநொச்சி சாலை ஊழியர்களுக்கும் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை கைலப்பபு ஏற்பட்டது

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி. இராமநாதபுரம் நோக்கிச் சென்ற கிளிநொச்சி சாலை பஸ் மீது இராமநாதபுரம் பிரதேசத்தில் கல்வீச்சு மேற்க் கொள்ளப்ட்டுள்ளது. இதையடுத்து இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்ப்ட்டுள்ளது.

இந்த கைகலப்பை அடுத்து பொலிஸார் நிலமையை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இரண்டு தரப்பினிரதும் பிரதிநிதிகள் அழைத்து வரப்பட்டு சமரசம் செய்யும் நடிவடிக்கையிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பஸ் நிலையத்திலிருந்து தனியார் பஸ் புறப்படும் நேரத்திற்கு ஒத்த நேரத்தில் இ.போ.ச பஸ் முந்திக் கொண்டு செல்வதினால் தனியார் பஸ்களுக்கு போதிய வருமானம் இன்றி தத்தழிக்கின்றனர் இவ்வாறான நிலையிலேயே இந்த பிரச்சனை உருவாகியுள்ளது.

2 3 4 5 6 7 8 9