செய்திகள்

ஈடன்கார்டனில் தலைவணங்கிய விராட் கோலி ‘அணியை விட்டு வெளியேறியதாக உணரவில்லை’ சச்சின் பாராட்டு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது.

விராட் கோலி அபார ஆட்டம் மூலம் வெற்றிய இந்திய வசமாக்கி ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்தார்.

பாகிஸ்தான் முதலில் நிர்ணயம் செய்த 119 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு தொடக்கம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. ரோகித் சர்மா 10 ரன்னிலும், ஷிகர் தவான் 6 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா ரன் ஏதுமின்றியும் ஆட்டம் இழந்தனர். இதனையடுத்து விராட் கோலியும், யுவராஜ்சிங்கும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து அணியை காப்பாற்றினர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி சீராக ரன்கள் எடுத்து ரசிகர்களை பரவசப்படுத்தினார்.

யுவராஜ் சிங் அவுட் ஆனதை தொடர்ந்து விராட் கோலியும், கேப்டன் டோனியும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.இந்திய அணி 15.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 55 ரன்களுடனும் (37 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), டோனி 13 ரன்களுடனும் (9 பந்து, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கருக்கு பின்னர் மைதானத்தை கணித்து, பீல்டின் நிலைகளைக் கணித்து ஆடக்கூடிய ஒரே வீரர் என்பதையும் விராட் கோலி நிரூபித்தார். விராட் கோலி தனது அரை சதத்தை இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கருக்கு சமர்ப்பனம் செய்தார்.

விராட் கோலி அரைசதம் அடித்ததும் ரசிகர்கள் பாராட்டு மழையில், சச்சின் தெண்டுல்கருக்கு மைதானத்தில் இருந்தவாறு தலைவணங்கினார்.

சச்சின் தெண்டுல்கரும் கடும் மகிழ்ச்சி அடைந்தார். இந்திய அணி இலக்கை அடைந்ததும் சச்சின் தெண்டுல்கர், அமிதாப் பச்சன் உள்ளிட்டோரும் தேசிய கொடியை அசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். விராட் கோலி பேசுகையில், யுவராஜ் வானிலையானது புயலாகி பின்னர் தடாலடியாகி விடுகிறது. இந்த செயல்பாடுகள் அவருக்கு மிகவும் நல்லது என்றே நான் நினைக்கின்றேன். ”நான் சச்சின் தெண்டுகல்கரை பார்த்துதான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். 67 ஆயிரம் மக்கள் மற்றும் அவருடைய முன்னிலையில் இதனை செய்வது ’கிரேட் பீலிங்’,” என்று கூறிஉள்ளார்.