செய்திகள்

ஈராக்கின் கல்லறை தளங்களில் இருந்து 470 பிணங்கள் தோண்டியெடுப்பு

ஈராக்கின் முக்கிய நகரமான திக்ரித் அருகே கல்லறை தளத்தில் இருந்து 470 பிணங்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஈராக் சுகாதாரத்துறை அமைச்சர்அடிலா ஹம்மௌத் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும்போது ‘‘திக்ரித்தில் உள்ள கல்லறைத் தளத்தில் இருந்து 470 ஸ்பெய்ச்சர் தியாகிகளின் பிணங்களை தோண்டியெடுத்துளோம்” என்றார்.
கடந்த ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் அரசுப் படைக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. அப்போது அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள், திக்ரித் நகரின் அருகில் உள்ள ஸ்பெய்சர் தளத்தில் உள்ள ராணுவ வீரர்களை, தீவிரவாதிகள் கடத்தினர். அவர்கள் அனைவரையும் கொலை செய்து புதைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது