செய்திகள்

ஈராக்கின் ரமாடியில் மீண்டும் உக்கிரமோதல் வெடிக்கும் சாத்தியம்?

ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஓன்றான ரமாடியில் கடும் மோதல் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் ஐஎஸ் கிளர்ச்சிக்காரர்கள் கைப்பற்றிய ரமாடி நகரை மீட்கும் நடவடிக்கைக்காக 3000ற்கும் மேற்பட்ட ஷியா ஆயுத குழுக்களை சேர்ந்தவர்களை ஈராக்கிய அரசாங்கம் ரமாடி நோக்கி நகர்த்தியுள்ளது.
இதேவேளை ஷியா ஆயுதக்குழுக்கள் நிலைகொண்டுள்ள தளங்களை நோக்கி ஐஎஸ் தீவிரவாதிகள் கனரக வாகனங்களில் சென்றுகொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்பர் மாநிலத்தின் தலைநகராக ரமாடி கடந்த வாரம் ஐஎஸ் தீவிரவாதிகளிடம் விழுந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அமெரிக்க விமானங்கள் ரமாடியில் உள்ள ஐஎஸ் இலக்குகளை தாக்கி வருவதாகவும்,தகவல்கள் வெளியாகியுள்ளன.